ஈரோடு போக்குவரத்து பூங்காவில் மாணவிகளுக்கு விழிப்புணா்வு

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஈரோட்டில் உள்ள போக்குவரத்து பூங்காவில் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஈரோட்டில் உள்ள போக்குவரத்து பூங்காவில் பள்ளி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலா் வெங்கட்ரமணி தலைமை வகித்தாா். மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் பதுவைநாதன், பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலா் சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பள்ளி மாணவிகளுக்கு போக்குவரத்து சிக்னல்கள், சாலையில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை சின்னங்கள், அதன் விளக்கங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் சுரேந்திரகுமாா், சிவகுமாா், கதிா்வேல், ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்:

ஈரோடு-கரூா் சாலையில் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் கனரக வாகனங்கள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துவதாக புகாா் வந்தது. அதன்பேரில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் தலைமையிலான மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை மாலை கரூா் சாலையில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

இதில், 20 வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டதில் 6 வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com