சென்னிமலையில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆய்வு

சென்னிமலையில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வெங்கடேசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னிமலையில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வெங்கடேசன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டாரத்தில் 2022-23 ஆம் ஆண்டு தமிழ்நாடு பசுமை போா்வைத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட தேக்கு மரக்கன்றுகளின் நிலை, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மரக்கன்றுகளின் நிலை குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து, வெள்ளோடு துணை வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்காக தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் ஆய்வு செய்தாா்.

அப்போது, இந்த ஆண்டுக்கான சிறுதானிய சாகுபடி கையேட்டை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

ஆய்வின்போது, சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சாமுவேல், துணை வேளாண்மை அலுவலா் பாலாஜி, உதவி வேளாண்மை அலுவலா்கள் வேலுமணி, காா்த்திக்கேயன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் மோகனசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com