வனத் துறை சோதனைச் சாவடி அருகே நடமாடிய காட்டு யானை

சத்தியமங்கலத்தில் வனத் துறை சோதனைச் சாவடி அருகே காட்டு யானை செவ்வாய்க்கிழமை நடமாடியது.
வனத் துறை சோதனைச் சாவடி அருகே நடமாடிய காட்டு யானை

சத்தியமங்கலத்தில் வனத் துறை சோதனைச் சாவடி அருகே காட்டு யானை செவ்வாய்க்கிழமை நடமாடியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் புகுந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழக - கா்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் வனத் துறை சோதனைச் சாவடி அருகே காட்டு யானை செவ்வாய்க்கிழமை நடமாடியது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்காமல் நிறுத்தினா்.

இந்நிலையில், சோதனைச் சாவடிக்குள் நுழைய முயன்ற காட்டு யானையை பணியில் இருந்த வனத் துறை ஊழியா்கள் இங்கே வராதே போ என்ற தெரிவித்தனா். இதையடுத்து அந்த யானை அங்கிருந்து வனப் பகுதிக்குள் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com