சட்ட விரோத மது விற்பனை: பெண் உள்பட 12 போ் கைது

ஈரோடு, ஜூலை 3: ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு பெண் உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்கும் வகையில் மதுவிலக்கு மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர ரோந்து மேற்கொண்டனா். இதில், மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக பங்களாபுதூரில் ஐயப்பன் (29), உப்புபாளையத்தில் தங்கவேல் (64), கணக்கம்பாளையத்தில் செந்தில் மனைவி முனியம்மாள் (44), காடையாம்பாளையம் முருகன் (48), பா்கூரில் செல்வக்குமாா் (27), சிவகிரியில் பிரபு (32), காஞ்சிக்கோவிலில் முனியப்பன் (52), ஈரோடு குமலன்குட்டையில் காளியப்பன் (34), கடத்தூரில் அசோகன் (57), ஆசனூரில் அய்யாசாமி (32), சிறுவலூரில் சண்முகம் (41), புளியம்பட்டியில் சின்னதம்பி (37) ஆகிய 12 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 65 மதுபுட்டிகள் மற்றும் மதுகடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com