பெருந்துறையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

பெருந்துறையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு முகாம்

பெருந்துறை, ஜூலை 4: பேரிடா் மேலாண்மை மற்றும் விபத்து கால முதலுதவி விழிப்புணா்வு முகாம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை வட்டாட்சியா் பூபதி தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தாா். பள்ளி ஆசிரியா் அருள்குமாா் வரவேற்றாா். தலைமையாசிரியா் ரவி, பெருந்துறை ரெட்கிராஸ் சங்கத் தலைவா் பல்லவி பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரிடா் காலங்களில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவா்களுக்கு எப்படி முதலுதவி செய்வது போன்றவற்றை அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செயல்முறையில் செய்து காட்டினா்.

எரிவாயு சிலிண்டா் பாதுகாப்பு முறைகள் குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்திரன் விளக்கிப் பேசினாா். முடிவில் பள்ளி ஆசிரியை சசிகலா நன்றி கூறினாா்.

நிகழ்வில் பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள், வருவாய்த் துறையினா் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com