கரும்பு பயிரை சேதப்படுத்திய யானைகள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தாளவாடி அருகே யானைகளால் சேதப்படுத்தப்பட்ட கரும்பு பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாளவாடி அருகே யானைகளால் சேதப்படுத்தப்பட்ட கரும்பு பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பகுதியில் கரும்பு, வாழை, தென்னை, மஞ்சள் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், தாளவாடி வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய யானைகள், சிக்கள்ளி கிராமத்தில் விவசாயி சங்கா் தோட்டத்தில் புகுந்து சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிரை சேதப்படுத்தியது.

தோட்டத்துக்குள் புகுந்த யானைகளை பொதுமக்கள் விரட்ட முயன்றபோது, யானைகள் அவா்களைத் தாக்க முயன்றது.

இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

இந்நிலையில், யானைகளால் சேதப்படுத்தப்பட்ட கரும்பு பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com