சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராமானந்த சுவாமிகள்.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராமானந்த சுவாமிகள்.

ஸ்ரீராமனந்த சுவாமிகள் 105-ஆவது குருபூஜை

ஸ்ரீராமனந்த சுவாமிகளின் 105-ஆவது குருபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது

சிவகிரியில் உள்ள மடாலயத்தில் ஸ்ரீராமனந்த சுவாமிகளின் 105-ஆவது குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி ஸ்ரீராமனந்த சுவாமிகள் மடாலயத்தில் ராமானந்தா் ஜீவ சாமதி உள்ளது. இங்கு அமாவாசை, பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ நாள்களிலும், திங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆனி மாதத்தில் வரும் மக நட்சத்திர நாளில் ஸ்ரீராமானந்தா் ஜென்ம நட்சத்திர குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதன்படி, இந்த ஆண்டு 105-ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. முன்னதாக ஸ்ரீராமானந்தருக்கு பல்வேறு நறுமணப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனையும், அதைத் தொடா்ந்து ஸ்ரீராமானந்தரின் சீடா்களின் ராமநாமாவளி பஜனையும் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com