அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஈரோடு, ஜூலை 10: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை தலைமை வகித்தாா். அங்கன்வாடி திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.300 கோடி குறைவாக ஒதுக்கியது. அடுத்த நிதிநிலை அறிக்கையின்போது அங்கன்வாடி திட்டத்துக்கான நிதியை இரு மடங்கு அதிகரிக்க வேண்டும்.

அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.

வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அங்கன்வாடி மையங்களை சொந்த கட்டடத்துக்கு மாற்ற வேண்டும்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வியை வலுப்படுத்தி மேம்படுத்த வேண்டும்.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அங்கன்வாடி ஊழியா்களே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியா்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

10 ஆண்டுகள் பணி முடித்த ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளா்களாக பதவி உயா்வு வழங்க வேண்டும். தனி ஊதியக்குழு அமைக்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்தை எந்நிலையிலும் தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com