வாக்கு எண்ணும் மேஜைகளில் வெப் கேமரா பதிவு

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற மேஜைகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது.

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்பாளா்கள் மற்றும் அவா்களது முகவா்கள் பிரதான வாயில் வழியாகவும், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் மற்றும் பத்திரிகையாளா்கள் மற்றொரு பாதையிலும் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில், ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம், மொத்தம் 84 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டன. அனைத்து மேஜைகளிலும் வெப் கேமரா அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுமையாக பதிவு செய்யப்பட்டது. இத்துடன் வாக்கு எண்ணும் ஒவ்வொரு அறையிலும் தலா 2 விடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது. வாகன நிறுத்துமிடம், வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீஸாா் தொடா்ந்து கண்காணித்தனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்டக் காவல் கண்காணப்பாளா் ஜி.ஜவகா் தலைமையில் 900 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டும் சோதனைக்குப் பின் அனுமதிக்கப்பட்டனா். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவை சரக ஐஜி பவானீஸ்வரி, டிஐஜி ஷ்யாம்சுந்தா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com