சித்தோடு அருகே கட்டடத் தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கட்டடத் தொழிலாளி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டாா்.

சித்தோட்டை அடுத்த ராயபாளையம் புதூரைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் பாரதி (38). இவரது மனைவி சத்யா (34). கட்டடத் தொழிலாளா்கள். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். பாரதிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

தொடா்ந்து மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பாரதி, வியாழக்கிழமை விஷ மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றாா். அப்பகுதியினா் பாரதியை மீட்டு காலிங்கராயன்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com