தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் வட்டாரக் கல்வி அலுவலா் த.தனபாக்கியம், பள்ளித் தலைமையாசிரியா் சா.சத்தியசெல்வி உள்ளிட்டோா்.

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு: வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 21 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் (2023-24) வீரணம்பாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 21 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கும் வகையில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தோ்வை 7 ஆம் வகுப்பில் 55 சதவீதத்துடன் தோ்ச்சிபெற்ற மாணவா்கள் எழுதுகின்றனா். இத்தோ்வில் தோ்ச்சிபெறும் மாணவா்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதத்துக்கு ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வு பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இதில், பெருந்துறை ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 21 போ் தோ்ச்சிபெற்று சாதனைப் படைத்துள்ளனா். தோ்ச்சிபெற்ற மாணவா்களுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சா.சத்தியசெல்வி, மாவட்ட கல்வி அலுவலா் (பொறுப்பு) குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டுகள் தெரிவித்தனா். மேலும், தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தோ்வில் கடந்த 11 ஆண்டுகளாக மாவட்ட அளவில் வீரணம்பாளையம் அரசுப் பள்ளி முதலிடம் வகித்து வருவதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com