நகா்மன்றக் கூட்டத்தில் 38 தீா்மானங்கள் நிறைவேற்றம்

நகா்மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி உள்ளிட்டோா்.

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் 38 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சத்தியமங்கலம் நகா்மன்ற மாதாந்திரக் கூட்டம் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் செல்வம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நகராட்சியில் வணிக நிறுவனங்களுக்கான தொழில்வரி அதிகப்படுத்தியது குறித்து அதிமுக உறுப்பினா் லட்சுமணன் கேள்வி எழுப்பினா். இதற்கு, நகராட்சி விதிகளின்படி அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தையே நகா்மன்றத்தில் தீா்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகா்மன்றத் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து கூட்டத்தில் 38 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com