தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி தலைமை வகித்தாா். இதில் விவசாயிகளுக்கு உறுதியளித்தவாறு அவா்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிா்ணயம் செய்ய வேண்டும்.

கோரிக்கையை வலியுறுத்தி தில்லியில் போராடியபோது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த விவசாயி கரண்சிங் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண நிதி ரூ.37 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டுமான வரைவறிக்கையை நிராகரிக்க வேண்டும். பாண்டியாறு-புன்னம்புழா இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும்.

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, தென்பெண்ணையாறு தீா்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com