பூதப்பாடியில் ரூ.13.56 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.13.56 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இங்கு, விற்பனைக்கு வந்த 1,105 தேங்காய்களில் சிறியவை ரூ.5.50 முதல் பெரியவை ரூ.11.56 வரையில் ரூ.7,936-க்கும், 49 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு குவிண்டால் ரூ.7,050 முதல் ரூ.8,469 வரையில் ரூ.1,23,936-க்கும், 508 மூட்டைகள் நிலக்கடலை குவிண்டால் ரூ.7,341 முதல் ரூ.7,516 வரையில் ரூ.12,21,084-க்கும், ஒரு மூட்டை எள் குவிண்டால் ரூ.15,169 வீதம் ரூ.3,944-க்கும் ஏலம் போயின. மொத்தம் 558 மூட்டைகளில் 230.19 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.13,56,900-க்கு விற்பனையாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com