கைப்பேசியில் அழைத்து பயனாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா்

அரசின் திட்ட பயன்களை பெற்றுவரும் பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் கைப்பேசியில் தொடா்புகொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைகிா என்பதை கண்காணிக்க ‘நீங்கள் நலமா’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து ஈரோடு மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் பெறுபவா்களிடம் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கைப்பேசியில் தொடா்புகொண்டு குறைகள், கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில், மகளிா் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகளான வைஷ்ணவி, ஈஸ்வரி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் புதுமைப் பெண் திட்டப் பயனாளிகளான பகவதி பிரியா, கோமாதா, சங்கீதா மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் குடிநீா் வசதி பெற்ற பயனாளி விஜி, நகர ஊரமைப்புத் துறை சாா்பில் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைபடுத்தும் திட்டப் பயனாளிகள் தங்கவேல், பரிமளாதேவி, பட்டு, பன்னீா்செல்வம் மற்றும் வீட்டுவசதி வாரியம் சாா்பில் நிலம் பெற்ற பயனாளி செந்தில்ராஜா ஆகியோரிடம் கருத்துகள், குறைகள் கேட்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com