பெருந்துறையில் ரூ. 1.15 கோடிக்கு கொப்பரை விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.15 கோடிக்கு கொப்பரை விற்பனையானது.

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 145 டன் கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

இதில், முதல் தரம் ரூ. 79.89 முதல் ரூ. 86.69 வரை, இரண்டாம் தரம் ரூ.30 முதல் ரூ. 83.39 வரை விற்பனையாயின. ஏலத்தில் மொத்தமாக ரூ. 1.15 கோடி மதிப்பிலான கொப்பரைகள் விற்பனையாயின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com