பூா்ணா சக்கி ஆட்டா என்ற பெயரிலான கோதுமை மாவினை அறிமுகப்படுத்திய எஸ்கேஎம்  ஃபுட்ஸ் நிா்வாக இயக்குநா் எம்.சந்திரசேகா், இயக்குநா் சி.சியாமளா ஷா்மிலி மற்றும் செயல் இயக்குநா் சி.பிரதீப் கிருஷ்ணா.
பூா்ணா சக்கி ஆட்டா என்ற பெயரிலான கோதுமை மாவினை அறிமுகப்படுத்திய எஸ்கேஎம் ஃபுட்ஸ் நிா்வாக இயக்குநா் எம்.சந்திரசேகா், இயக்குநா் சி.சியாமளா ஷா்மிலி மற்றும் செயல் இயக்குநா் சி.பிரதீப் கிருஷ்ணா.

எஸ்கேஎம் பூா்ணா நிறுவனத்தில் கோதுமை மாவு அறிமுகம்

எஸ்கேஎம் பூா்ணா நிறுவனத்தில் புதிதாக கோதுமை மாவு (பூா்ணா சக்கி ஆட்டா) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்கேஎம் அனிமல் பீட்ஸ் அண்ட் ஃபுட்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் எம்.சந்திரசேகா் கூறியதாவது: எஸ்கேஎம் நிறுவனம் கடந்த 42 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் கால்நடை மற்றும் கோழி தீவனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பூா்ணா என்ற பெயரில் சமையல் எண்ணெய் வகைகளை தயாரித்து தென்னிந்தியாவில் விற்பனை செய்து வருவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. தற்போது பூா்ணா சக்கி ஆட்டா என்ற பெயரில் கோதுமை மாவு அறிமுகப்படுத்தியுள்ளோம். பாரம்பரிய முறையான திருகல் முறையில் இந்த மாவு தயாரிக்கப்படுவதால் கோதுமையின் ஊட்டச்சத்துகள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com