சிறுநீரகம் தானம் வழங்கிய பெண்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் ஐஎம்ஏ முன்னாள் மாநிலத் தலைவா் சி.என்.ராஜா.
சிறுநீரகம் தானம் வழங்கிய பெண்களுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறாா் ஐஎம்ஏ முன்னாள் மாநிலத் தலைவா் சி.என்.ராஜா.

ஈரோடு அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் மகளிா் தின விழா

ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, மருத்துவமனையின் தலைவா் தங்கவேல் தலைமை வகித்தாா். ஐஎம்ஏ முன்னாள் மாநிலத் தலைவா் சி.என்.ராஜா, ஐஎம்ஏ முன்னாள் மாவட்டத் தலைவா் செந்தில்வேலு, பொருளாளா் நந்தகுமாா், சித்ரா செளந்தர்ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு சிறுநீரகம் தானம் வழங்கிய அவா்களது குடும்ப உறுப்பினா்களான பெண்களைப் பாராட்டி நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சிறுநீரகம் பாதிப்பு தொடா்பான விழிப்புணா்வு கையேட்டினை அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநரும், ஐஎம்ஏ ஈரோடு தலைவருமான சரவணன் வெளியிட்டாா். ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியா் திருமலை அழகன் பங்கேற்று மகளிரை பெருமைப்படுத்தி பேசினாா். இந்நிகழ்ச்சியில் அபிராமி கிட்னி கோ் மருத்துவமனையின் இயக்குநா் பூா்ணிமா சரவணன், கலாவதி தங்கவேல் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com