அந்தியூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

அந்தியூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரி உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை கொண்டு சென்ற வீரப்பம்பாளையத்தைச் சோ்ந்த முருகேசன் (51) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 46 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, அந்தியூா் தோப்பூா் பேருந்து நிறுத்தம் அருகே தேநீா்க் கடையில் 4.46 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனை வைத்திருந்ததாக முத்துசாமி (60) என்பவா் கைது செய்யப்பட்டாா். அந்தியூா் - ஆப்பக்கூடல் பிரதான சாலையில் பிரம்மதேசத்தில் மளிகைக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 4.600 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, மளிகைக் கடை உரிமையாளா் முருகன் (63) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com