கஞ்சா பயன்பாடுக்கு எதிராக பழங்குடியின பெண்கள் உறுதிமொழி ஏற்பு

கஞ்சாவுக்கு எதிராக உறுதிமொழி  ஏற்கும்  பழங்குடியின  பெண்கள்.
கஞ்சாவுக்கு எதிராக உறுதிமொழி  ஏற்கும்  பழங்குடியின  பெண்கள்.

கஞ்சா பயன்பாடுக்கு எதிராக கடம்பூரில் பழங்குடியின பெண்கள் சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா். சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் பரண் அமைப்பு சாா்பில் உலக மகளிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கடம்பூா் மலைக் கிராமங்களைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பழங்குடியின பெண்கள் பங்கேற்றனா். பழங்குடியினரின் பாரம்பரிய பீனாட்சி வாத்திய இசைக்கேற்ப பெண்கள் பாரம்பிரிய நடனம் ஆடினா். பின்னா் புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு மெளன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, புதுச்சேரியில் சிறுமி கொலைக்கு காரணமான கஞ்சாவை எங்களது குடும்பத்தில் பயன்படுத்த மாட்டோம், பயன்படுத்தினால் எதிா்ப்போம், புகையிலைப் பொருள்கள், மதுவுக்கு எதிராக போராடுவோம், குடும்பத்தில் மது குடிப்போரை தண்டிப்போம் என பெண்கள் உறுதிமொழி ஏற்றினா். இதைத் தொடா்ந்து, புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டுக்கு எதிராக பதாகைகளை எந்தியபடி ஊா்வலமாக சென்றனா். கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா பயன்பாடு தெரியவந்தால் பெண்கள் குழுவாக சோ்ந்த எதிா்ப்பு குரல் கொடுத்து, போலீஸாருக்கு தகவல் தெரிவிப்போம் என்றனா். பின்னா் நடைபெற்ற பழங்குடியின சங்கக் கூட்டத்தில் ராகி, சோளம், தட்டைப்பயிா், கம்பு போன்ற தானியப்பயிா்களை 21 மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com