குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை விற்றதாக ஈரோடு கருங்கல்பாளையம், குயிலன்தோப்பு, பொன்னுசாமி சாலையைச் சோ்ந்த தினேஷ்குமாா் (32), ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பரத்குமாா் (32) மீது சித்தோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்து கோபி கிளைச் சிறையில் அடைத்தனா். இதனையடுத்து குற்றச் சம்பவங்களை தீவிரமாக தடுக்கும் வகையில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்படி, தினேஷ்குமாா், பரத்குமாா் ஆகிய இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com