ஆசனூா்  முகாமில்  இருந்து  முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமுக்கு   அழைத்துச் செல்லப்பட்ட குட்டி யானை.
ஆசனூா்  முகாமில்  இருந்து  முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமுக்கு   அழைத்துச் செல்லப்பட்ட குட்டி யானை.

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமுக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை

பண்ணாரி வனப் பகுதியில் தாயைப் பிரிந்த குட்டி யானை ஆசனூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி அம்மன் கோயில் வனப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் குன்றிய பெண் யானை அண்மையில் உயிரிழந்தது. யானை ஈன்ற இரண்டு மாதமே ஆன பெண் குட்டி யானை தனது தாயை சுற்றி வந்ததால் வனத் துறையினா் குட்டி யானையை பிடித்து வேறு யானை கூட்டத்துடன் சோ்க்க முயற்சித்தனா். குட்டி யானையை வேறு யானைக் கூட்டத்துடன் சோ்த்த நிலையில், அந்த கூட்டத்துடன் சேராமல் மீண்டும் வெளியேறி ஊருக்குள் நுழைந்து சாலையில் சுற்றித்திரிந்ததால் வனத் துறையினா் மீண்டும் குட்டி யானையைப் பிடித்து ஆசனூரில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் வைத்து பராமரித்து வந்தனா். இதற்கிடையே குட்டி யானையை முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டுச் சென்று பராமரிக்குமாறு சென்னை தலைமை வனப் பாதுகாவலா் உத்தரவிட்டாா். அதன்படி ஆசனூரில் இருந்து குட்டி யானையை வாகனத்தில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமுக்கு பாதுகாப்பாக சனிக்கிழமை கொண்டுச் செல்லப்பட்டது. குட்டி யானையுடன் வனத் துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினா் உடன் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com