ரயில்வே ஊழியா் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ரயில்வே ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நாணயங்களைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு ரயில்வே காலனி குடியிருப்பைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (40), இவா் தென்னக ரயில்வேயில் தொழில்நுட்பப் பணியாளராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக ஆறுமுகமும் கடந்த வாரம் திருச்சிக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்து 5 பவுன் தங்க நாணயங்கள் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தெற்கு காவல் நிலையத்துக்கு ஆறுமுகம் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு செய்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com