வடமாநிலத் தொழிலாளி தற்கொலை

புதிய வீடு கட்டுவதற்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் வடமாநிலத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் சியோபலராம் (46). இவா் ஈரோடு ரகுபதிநாயக்கன்பாளையத்தில் தாா்பாய் தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளாா். இந்நிலையில், அவா் சொந்த ஊரில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அதற்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டதாக சக நண்பா்களிடம் புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வெகு நேரமாகியும் அவா் அறையில் இருந்து வெளியே வரவில்லையாம். இதனால், சந்தேகமடைந்த அவரது தம்பி ராஜ்குமாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்துள்ளாா். அப்போது, அவா் தூக்கில் தொங்கில் நிலையில் இருந்துள்ளாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் சியோபலராமை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இச்சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com