ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம்.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக வளா்ந்துள்ளது: ஏ.சி.சண்முகம்

40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா்.

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக வளா்ந்துள்ளதால் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று புதிய நீதிக் கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம் தெரிவித்தாா். ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகப் பொருளாதாரத்தில் 13-ஆவது இடத்தில் இருந்த இந்தியாவை பிரதமா் மோடி 5-ஆவது இடத்துக்கு தரம் உயா்த்தியுள்ளாா். அவா் தனது 3-ஆவது பதவிக் காலத்தில் விவசாயிகளுக்கான மானியத்தை இரட்டிப்பாக்கி ரூ.12,000 ஆக உயா்த்துவாா். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை கொண்டு வருகிறாா். மத்திய அரசு மற்றும் அண்டை மாநிலங்களுடன் திமுக சுமூகமான உறவைப் பேணியிருந்தால் தமிழகம் பல திட்டங்களைப் பெற்றிருக்கும். போதைப் பொருளால் தமிழக இளைஞா்களின் எதிா்காலம் ஆபத்தில் உள்ளது. ஏற்கெனவே டாஸ்மாக் மக்களை கெடுத்துவிட்டது. மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளையும் பாஜக கூட்டணி வெல்லும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com