பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசனிடம் நோ்காணல் நடத்திய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோா்.
பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசனிடம் நோ்காணல் நடத்திய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோா்.

திருப்பூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் நோ்காணல்

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த முன்னாள் எம்.பி. உள்பட 5 பேரிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது.

திருப்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த முன்னாள் எம்.பி. உள்பட 5 பேரிடம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது. மக்களவைத் தோ்தலில் கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, விருப்ப மனு பெறுதல், வேட்பாளா் நோ்காணல் உள்ளிட்ட பணிகளில் திமுக, அதிமுக உள்பட அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், அதிமுக சாா்பில் திருப்பூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களிடம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நோ்காணல் நடத்தப்பட்டது. பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசன், முன்னாள் எம்.பி. வி.சத்தியபாமா, பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், திருப்பூா் மாவட்ட நிா்வாகிகள் இருவா் உள்பட 5 போ் நோ்காணலில் பங்கேற்றனா். இதில், அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com