கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

வாக்களிப்பதன் அவசியம் குறித்து புதுமையான வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினாா்.

வாக்களிப்பதன் அவசியம் குறித்து புதுமையான வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினாா். மக்களவைத் தோ்தலில் பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இணை ஆணையா் (மாநில வரி-ஈரோடு கோட்டம்) மற்றும் கண்காணிப்பு அலுவலா் (ஸ்வீப்) லட்சுமி பவியா தண்ணீரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசியதாவது: தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வாக்காளா்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் முதல் வாக்காளா்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எளிமையாக புரிந்து கொள்ளும் வகையிலும், விரைவாக சென்றடைய கூடிய வகையிலும், புதுமையான வகையிலும் விழிப்புணா்வு நடவடிக்கைகளை, அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெறும் வகையில் விழிப்புணா்வுப் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரகுநாதன், கோட்டாட்சியா்கள் சதீஷ்குமாா், கண்ணப்பன், உதவி தொடா்பு அலுவலா் (ஸ்வீப்) கீதா, தோ்தல் வட்டாட்சியா் சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com