ஈரோடு ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகம் திறப்பு

ஈரோடு ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தை காணொலிக் காட்சி மூலம் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட திண்டுக்கல், திருச்சி, ஈரோடு, பாலக்காடு ஆகிய 4 ரயில் நிலையங்களில் ஜன் அவுஷதி கேந்த்ரா என்ற பெயரில் நியாயமான விலையில் தரமான மருந்துகள் விற்பனை செய்யும் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்தகங்களை காணொலிக் காட்சி மூலமாக பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு ரயில் நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மருந்தகத்தில் ரயில்வே அதிகாரிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா். ஈரோடு ரயில் நிலைய வளாகத்தின் முகப்பு பகுதியில் ஏடிஎம் மையங்களுக்கு அருகே இந்திய மக்கள் மருந்தகம் என்ற புதிய மருந்தகம் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com