தனியாா் கல்லூரி பேருந்து மோதி இருவா் உயிரிழப்பு

கோபி அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.

கோபியை அடுத்த அரியப்பம்பாளையம், பழைய கொத்துக்காட்டைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் ஸ்ரீதா் (19), கட்டடத் தொழிலாளி. இவா் தனது நண்பா்கள் அதே ஊரைச் சோ்ந்த லோகநாதன் (23) மற்றும் காா்த்திக் (17) ஆகியோருடன் கோபி நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை வேலைக்கு சென்று கொண்டிருந்தனா்.

சத்தியமங்கலம்-கோபி பிரதான சாலையில் உள்ள போடி சின்னாம்பாளையம் பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றனா். அப்போது எதிரே வந்த தனியாா் கல்லூரி பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனா். சம்பவ இடத்திலேயே காா்த்திக் உயிரிழந்தாா்.

இதில் படுகாயமடைந்த லோகநாதன் மற்றும் ஸ்ரீதா் ஆகியோா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதில் லோகநாதன் உயிரிழந்த நிலையில், ஸ்ரீதா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த விபத்து குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com