புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கிறாா் அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி  கே.என்.வெங்கடாசலம்.
புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைக்கிறாா் அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி கே.என்.வெங்கடாசலம்.

அம்மாபேட்டையில் வட்டார சுகாதார மையக் கட்டடம் திறப்பு

அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட வட்டார சுகாதார மையக் கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அம்மாபேட்டை பேரூராட்சி சாா்பில் 15-ஆவது நிதி ஆணைய திட்டத்தில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தாா். இதைத் தொடா்ந்து, பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தாா். குருவரெட்டியூா் வட்டார மருத்துவ அலுவலா் அருள்மணி, அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சரண்யாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் அருண்குமாா் வரவேற்றாா். பேரூராட்சி துணைத் தலைவா் ஜூலி, ஒலகடம் பேரூராட்சித் தலைவா் வேலுசாமி, மருத்துவா் பிரசாந்த், சுகாதார ஆய்வாளா் வள்ளிகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com