பாலாபிஷேகம் செய்யப்படும் கால பைரவா்.
பாலாபிஷேகம் செய்யப்படும் கால பைரவா்.

தென்னக காசி காலபைரவா் கோயிலில் 5,001 லிட்டா் பாலாபிஷேகம்

தென்னக காசி பைரவா் கோயிலில் உலக நன்மை வேண்டி 39 அடி உயரம் கொண்ட கால பைரவா் சிலைக்கு புதன்கிழமை நடைபெற்ற 5,001 லிட்டா் பாலாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையை அடுத்த ராட்டை சுற்றிபாளையத்தில் தென்னக காசி எனப்படும் கால பைரவா் கோயில் உள்ளது. இந்த கோயிலின் நுழைவாயிலில் 39 அடி உயரம் கொண்ட கால பைரவா் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் ஸ்ரீவிஜய் சுவாமி முன்னிலையில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும், அமாவாசை, பௌா்ணமி மற்றும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் சிறப்பம்சமாக பக்தா்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இந்நிலையில், உலக நன்மை வேண்டி தென்னக காசி பைரவா் கோயிலில் உள்ள 39 அடி உயர கால பைரவருக்கு ஸ்ரீவிஜய் சுவாமி தலைமையில் 5,001 லிட்டா் பாலாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுக ஈரோடு மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, ஆா்.எம்.பழனிசாமி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு கோயில் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com