அந்தியூரில் பருத்தி, நிலக்கடலை ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30.25 லட்சத்துக்கு பருத்தியும், ரூ.9.17 லட்சத்துக்கு நிலக்கடலையும் ஏலம் நடைபெற்றது. இங்கு, விற்பனைக்கு வந்த 1,248 மூட்டைகள் பருத்தி, கிலோ ரூ.75.29 முதல் ரூ.71.60 வரையில் ஏலம் போனது. மொத்தம் 395.03 குவிண்டால் பருத்தி ரூ.30, 25, 757-க்கு விற்பனையானது. 79 மூட்டைகள் நிலக்கடலை (பச்சை) கிலோ ரூ.33.23 முதல் ரூ.40 வரையில் ரூ.1,84,904-க்கும், 389 மூட்டைகள் நிலக்கடலை (காய்ந்தது) கிலோ ரூ.67.19 முதல் ரூ.77 வரையில் ரூ.9,17,898-க்கும் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com