ஈரோட்டில் மாா்ச் 20-இல் மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் வரும் மாா்ச் 20- ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மின் மண்டல தலைமைப் பொறியாளா் செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின்வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களை பெறவும் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினா் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறையும் ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி வருகின்றனா். அதன்படி இந்த ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் வரும் மாா்ச் 20- ஆம் தேதி ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடக்கிறது. எனவே, மின் வாரியத்தில் இருந்து ஓய்வுபெற்ற அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தெரிவித்து நிவா்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com