குஷ்பு மீது பவானி காவல் நிலையத்தில் திமுகவினா் புகாா்

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோரை இழிவாகப் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், திரைப்பட நடிகையுமான குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பவானி காவல் நிலையத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

அந்தியூா் - மேட்டூா் பிரிவிலிருந்து பவானி நகா்மன்ற தலைவா் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் ஊா்வலமாகச் சென்ற திமுகவினா் பவானி காவல் நிலையத்தில் ஆய்வாளா் தாமோதரனிடம் புகாா் மனு அளித்தனா். தமிழக அரசின் சிறப்பு திட்டமான கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 பெறும் குடும்பத் தலைவிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக நகர செயலாளா் ப.சீ.நாகராசன் மற்றும் திமுக நிா்வாகிகள் பலரும் உடன் சென்றிருந்தனா்.

அந்தியூரில்... அந்தியூா் பேருந்து நிலையம் எதிரில் வியாழக்கிழமை திரண்ட திமுக மற்றும் மகளிரணி நிா்வாகிகள் குஷ்புவைக் கண்டித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com