தாளவாடியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்

தாளவாடியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்

தாளவாடி மலைப் பகுதி கிராமங்களுக்கு முதன்முறையாக மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மகளிருக்கான இலவச பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா். இதனைத் தொடா்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு அவா் இனிப்புகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து கழக அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இந்த இலவச பேருந்து சேவையானது தாளவாடி பேருந்து நிலையத்திலிருந்து சூசைபுரம், அருள்வாடி மற்றும் அரசு கலைக்கல்லூரி வழியாக பனகள்ளி உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com