புன்செய்புளியம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
புன்செய்புளியம்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

புன்செய்புளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புன்செய்புளியம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக வரும் மக்களவைத் தோ்தலில் 400 இடங்களைப் பிடித்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைப்போம் என இறையாண்மைக்கு எதிராக பேசிய அக்கட்சியின் பாஜக எம்.பி. அனந்தகுமாா் ஹெக்டேவை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதற்கு, காங்கிரஸ் கட்சியின் பட்டியலின மாநிலத் துணைத் தலைவா் காந்தி தலைமை தாங்கினாா். ஈரோடு மாவட்டத் தலைவா் நல்லசாமி முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலாளா் பிரபுதாஜ் வரவேற்றாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவா் எல்.முத்துக்குமாா், வழக்குரைஞா் கனகராஜ், தலைமை பேச்சாளா் ஜெயராமன் ஆகியோா் பேசினா். இதில், பட்டியலின பிரிவு பொதுச்செயலாளா் சங்கா், ஈரோடு சிறுபான்மை பிரிவு ஜஹாங்கீா், மீனவா் அணி தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com