விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச் சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த மயில்சாமி, தீபா தம்பதியின் மகன் தனுஷ்குமாா் (20). தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா். இவா், இருசக்கர வாகனத்தில் கடந்த 12- ஆம் தேதி சென்றபோது சாலை விபத்தில் படுகாயமடைந்தாா். பவானி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னா் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு மூளைச் சாவு அடைந்தாா். இதைத் தொடா்ந்து அவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். இதையடுத்து அவருடைய இதயம், கல்லீரல், இரு சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டு, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் பரிந்துரைப்படி, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. உயிரிழந்த தனுஷ்குமாா் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வள்ளி சத்தியமூா்த்தி, மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com