அரசுப் பள்ளி மாணவன் தற்கொலை

பொதுத் தோ்வுக்கு படிக்காமல் கைப்பேசியில் விளையாடியாதை பெற்றோா் கண்டித்ததால் 10-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தச்சுத் தொழிலாளி லோகநாதன். இவரது மனைவி பூங்கொடி. இவா்களுக்கு மகள் கீா்த்தனா, மகன் ரகு ஆகியோா் உள்ளனா். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ரகு பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா் அடிக்கடி கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்ததால், அவரது தந்தை லோகநாதன், ரகுவை கண்டித்து கைப்பேசியை வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ரகு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற புன்செய் புளியம்பட்டி போலீஸாா் மாணவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com