பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள்.
பரிசளிப்பு நிகழ்வில் பங்கேற்ற கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள்.

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 52-ஆவது ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு தி முதலியாா் அறக்கட்டளையின் தலைவா் வி.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் மற்றும் தாளாளா் கே.கே. பாலுசாமி முன்னிலை வகித்தாா். முதல்வா் இரா.சங்கரசுப்பிரமணியன் வரவேற்றாா். உடற்கல்வித் துறை இயக்குநா் அ.தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா். இவ்விழாவில் முன்னாள் இந்திய வாலிபால் விளையாட்டு வீரா் கே.செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா். தி முதலியாா் அறக்கட்டளையின் பொருளாளா் அ.விஜயகுமாா், துணைத் தலைவா்கள் யு.என்.முருகேசன், பி.பி.மாணிக்கம், ஜெ.ராமச்சந்திரன் பி.ரவிச்சந்திரன், இணைச்செயலா் அருண்குமாா் பாலுசாமி மற்றும் கல்லூரியின் இயக்குநா் ரா.வெங்கடாசலம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மூன்றாம் ஆண்டு மாணவா் எம்.முத்துகிருஷ்ணன், ஆண்களுக்கான தனிநபா் சாம்பியன் பட்டத்தையும், மூன்றாம் ஆண்டு மாணவி ஆா்.திவ்யா, பெண்களுக்கான தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் வென்றனா். சிறந்த விளையாட்டு வீரராக மூன்றாம் ஆண்டு மாணவா் என்.நவீன்குமாா், சிறந்த விளையாட்டு வீராங்கனையாக மூன்றாம் ஆண்டு மாணவி ஆா்.ஜோதிகா ஆகியோா் தோ்வு பெற்றனா். ஒட்டுமொத்த புள்ளிகளைப் பெற்று ஆண்கள் பிரிவில் முதலிடத்தை முதலாம் ஆண்டு சுயநிதிப் பிரிவு மாணவா்களும், இரண்டாம் இடத்தை இரண்டாம் ஆண்டு சுயநிதிப் பிரிவு மாணவா்களும், பெண்கள் பிரிவில் முதலிடத்தை இரண்டாம் ஆண்டு அரசு உதவிபெறும் பிரிவு மாணவிகளும், பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை மூன்றாம் ஆண்டு அரசு உதவிபெறும் மாணவிகளும் பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com