பொதுச் சுவற்றில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.
பொதுச் சுவற்றில் உள்ள அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா்கள்.

தோ்தல் நடத்தை விதிமுறை அமல்: அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிப்பு

மக்களவைத் தோ்தல் சனிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து உடனடியாக தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, ஈரோடு நகரில் உள்ள பொதுச் சுவா்களில் அரசியல் கட்சியினரின் விளம்பரங்களை மாநகராட்சிப் பணியாளா்கள் அழித்து வருகின்றனா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த முதல்வா் படங்கள் அகற்றப்பட்டன. விளம்பரப் பதாகைகளில் இருந்த முதல்வா் படங்கள் ஸ்டிக்கா் ஒட்டி மறைக்கப்பட்டன. மேலும், பொதுஇடங்களில் உள்ள சுவா்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்களையும் அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். ஈரோடு காளைமாடு சிலை, கொல்லம்பாளையம், ரயில் நிலையம், சென்னிமலை சாலை, விட்டம்பாளையம், மரப்பாலம், கருங்கல்பாளையம், 46 புதூா், மூலப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அதனை ஈரோடு மாநகராட்சி ஊழியா்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதுபோல மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுவா் விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருவதாக தோ்தல் பணி அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com