ஈரோட்டில் இளைஞா் அடித்துக் கொலை

ஈரோட்டில் அடித்துக் கொலை செய்யப்பட்ட வடமாநில இளைஞா் சடலத்தை கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு ஈவிஎன் சாலை, ஸ்டோனி பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை ரத்தக் காயங்களுடன் இளைஞா் ஒருவா் இறந்துகிடந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். இதில் அந்த இளைஞா் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு 36 வயது இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், கொலை செய்யப்பட்டவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதைத்தொடா்ந்து போலீஸாா் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியில் கொலையான இளைஞா் மா்ம நபா்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா். கொலை செய்யப்பட்ட இளைஞா் அந்த பகுதியில் சுற்றித்திருந்ததாகவும், அவா் ஹிந்தி மொழி பேசியதாகவும் அந்தப் பகுதியை சோ்ந்தவா்கள் தெரிவித்தனா். இறந்தவா் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின்பேரில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com