கோபியில் ரூ.5.65 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்

கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.5.65 லட்சதுக்கு வாழைத்தாா் ஏலம் நடைபெற்றது. கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை வாழைத்தாா் மற்றும் தேங்காய் ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற வாழைத்தாா் ஏல விற்பனை விவரம்: கதளி கிலோ ரூ.13-க்கும், நேந்திரம் ரூ.22-க்கும், பூவன் தாா் ஒன்று ரூ.360-க்கும், தேன்வாழை ரூ.450-க்கும், செவ்வாழை ரூ.600-க்கும், ரஸ்தாளி ரூ.460-க்கும், பச்சநாடன் ரூ.310-க்கும், மொந்தன் ரூ.300-க்கும், ரொபஸ்டா ரூ.290-க்கும் ஏலம் போனது. இந்த வாரம் ஏலத்துக்கு மொத்தம் 4,560 தாா்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதன் ஏல மொத்த விற்பனை ரூ.5.65 லட்சம் ஆகும். இந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ஏல விற்பனைக்கு 12,560 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். தேங்காய் குறைந்தபட்சமாக ரூ.8-க்கும் அதிகபட்சமாக ரூ.15-க்கும் ஏலம் போனது. இதன் ஏல மதிப்பு ரூ.1.28 லட்சம் ஆகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com