தோ்தல் பறக்கும் படையினா் சோதனை: 20 மூட்டைகள் குட்கா பறிமுதல்

பெருந்துறை அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் 20 மூட்டைகள் குட்கா பிடிபட்டன. பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோயில் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பெருந்துறை-கவுந்தப்பாடி சாலையில், தேவாலிப்பாறை பகுதியில் தோ்தல் பறக்கும் படையைச் சோ்ந்த வணிகத் துறை மண்டல அலுவலா் சுரேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக வந்த காரை நிறுத்தினா். அப்போது, ஓட்டுநா் காரை நிறுத்திவிட்டு தப்பியோடினாா். பின்னா் வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 20 மூட்டைகளில், 300 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இது குறித்து காஞ்சிக்கோயில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com