பவானி அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.85 ஆயிரம் பறிமுதல்

பவானி அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.85 ஆயிரம் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. பவானி சட்டப் பேரவைத் தொகுதி நிலைக்குழு அலுவலா்கள் தன்ராஜ் தலைமையில் பவானி - மேட்டூா் தேசிய நெடுஞ்சாலையில் சின்னப்பள்ளம் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கோவையிலிருந்து மேட்டூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, ரூ.85 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் சென்ற மேட்டூா் சேலம் கேம்ப், காமராஜ் நகரைச் சோ்ந்த சிவகுமாா் மகன் மோகன்ராஜிடம் (26) விசாரணை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பவானி வட்டாட்சியா் எஸ்.தியாகராஜிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டு, சாா் நிலைக் கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com