பவானியில் ரூ.1.48 லட்சம் பறிமுதல்

பவானி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.48 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பவானி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.48 லட்சம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. பவானி - அந்தியூா் சாலையில் தொட்டிபாளையம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, ஈரோட்டில் இருந்து கா்நாடக மாநிலம், ராமாபுரம் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியபோது, ரூ.1.48 லட்சம் இருந்ததும், வாகனத்தில் சென்ற மக்புல், ஷேக்பீா், அங்கப்பன் ஆகியோரிடம் பணத்துக்கான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு பவானி வட்டாட்சியா் தியாகராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, பவானி சாா் நிலை கருவூலத்தில் பணம் செலுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com