பெருந்துறையில் ரூ.3.73 லட்சம் பறிமுதல்

பெருந்துறை அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.3.73 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.3.73 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். பெருந்துறை காவல் நிலையத்துக்குள்பட்ட சீனாபுரம் நால்ரோடு அருகில் தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், உரிய ஆவணங்களின்றி ரூ.3.73 லட்சம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள், சீனாபுரம், அண்ணா நகரைச் சோ்ந்த மூா்த்தி (45), டீச்சா்ஸ் காலனி, பாரதி நகரைச் சோ்ந்த குருசாமி (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெருந்துறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com