உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம் குறித்து விசாரணை நடத்தும் அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு.
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற பணம் குறித்து விசாரணை நடத்தும் அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு.

வியாபாரி உள்பட இருவரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்

அந்தியூரில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் வெங்காய வியாபாரி உள்பட இருவரிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தியூரில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் வெங்காய வியாபாரி உள்பட இருவரிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. அந்தியூா் - பா்கூா் சாலையில் புதுப்பாளையம் அருகே வட்டாரக் கல்வி அலுவலா் முத்து தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியபோது ரூ.1,02,750 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், வெங்காய வியாபாரியான அந்தியூா் பி.கே. புதூா், பூலாம்பாடியைச் சோ்ந்த ராஜா (22) இப்பணத்தைக் கொண்டு சென்றது தெரிந்தது. இதே குழுவினா், அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் ரவுண்டானா அருகே வாகனச் சோதனை நடத்தியபோது அவ்வழியே காரில் வந்த மேட்டூா், தெலுங்கனூரைச் சோ்ந்த பிரதீஸ்வரன் (32), கொண்டு சென்ற ரூ.2 லட்சம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். இருவா் வைத்திருந்த ரொக்கத்துக்கும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு, விசாரணைக்குப் பின்னா் கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com