தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி வடமாநில இளைஞா் உயிரிழப்பு

ஈரோட்டில் தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு: ஈரோட்டில் தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஈரோடு, கருங்கல்பாளையம் குயிலான்தோப்பு 2-ஆவது வீதியில் ஒரு கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் இளைஞரின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கருங்கல்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில், தண்ணீா்த் தொட்டியில் சடலமாகக் கிடந்தவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த டிண்டு (34), கருங்கல்பாளையம் பகுதியில் தங்கி, தனியாா் சாய ஆலையில் வேலை பாா்த்து வந்தது தெரியவந்தது.

கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்தி சுற்றி திரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com