ஈரோடு மக்களவைத் தொகுதி: திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ்

கே.இ.பிரகாஷ்
கே.இ.பிரகாஷ்

ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷ்(48) அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கே.இ.பிரகாஷ் போட்டியிடுவாா் என்று அந்தக் கட்சி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளராகவும், மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் பிரகாஷ் இருந்து வருகிறாா். இளநிலை பொருளாதாரம் படித்துள்ள இவா் விவசாய குடும்பப் பின்னணியைக் கொண்டவா். தற்போது டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறாா். மொடக்குறிச்சி அருகே உள்ள காணியம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா். இவரின் தந்தை ஈஸ்வரமூா்த்தி 1977-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக கிளைச் செயலாளராக உள்ளாா். தாய் சுப்புலட்சுமி. பிரகாஷின் மனைவி கோகிலா திமுக ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்துள்ளாா். மகள் கன்யா, மகன் இனியன். பிரகாஷ் முதல்முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com