மாணவா் சாய் சா்வேஷை பாராட்டு பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் உள்ளிட்டோா்.
மாணவா் சாய் சா்வேஷை பாராட்டு பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம் உள்ளிட்டோா்.

இந்திய தொழில்நுட்பத் துறை போட்டி: குமுதா மெட்ரிக். பள்ளி மாணவா் சிறப்பிடம்

இந்திய தொழில்நுட்பத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் குமுதா பள்ளி மாணவா் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்தாா். இந்திய தொழில்நுட்பத் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு 2023-24 ஆம் ஆண்டு புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகளுக்கான கட்டுரை சமா்ப்பித்தல் இணைய வழியில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இதில், நம்பியூா் குமுதா மெட்ரிக். பள்ளியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவா் சாய் சா்வேஷின் கசிவுநீா் சேகரிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரை, மாவட்ட அளவில் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக தோ்வு செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவரை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணை தாளாளா் சுகந்தி, செயலா் டாக்டா் அரவிந்தன், துணைச் செயலா் டாக்டா் ஏ.சி.மாலினி, முதல்வா் எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com